சந்திராபூர் (மகாராஷ்டிரா):மகாராஷ்டிராவின் சந்திராபூர் கிராமத்தில் உள்ள லத்போரி கிராமத்தில் நேற்றிரவு (ஏப்.2) 8 மணியளவில் பெரிய இடி சத்தம் ஒன்று கேட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு செயற்கை கோளின் சில உதிரிபாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாகங்களை ஆய்வு செய்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இது நியூசிலாந்து அனுப்பிய ராக்கெட்டின் பாகங்களாக இருக்ககூடும் என சந்தேகிக்கின்றனர்.
மேலும் நேற்றிரவு லத்போரி கிராம மக்கள் வானில் விண்கல் போன்ற ஒன்றை பார்த்துள்ளனர், அதன்பின்னர் வானிலிருந்து பெருத்த வெடிசத்தம் கேட்டுள்ளது.