பரேய்லி: உத்தரப்பிரதேச மாநிலம், பரேய்லி அருகே உள்ள துங்கா கிராமத்தில் வசிக்கும் நிர்தேஷ்(25) என்பவர், தனது மனைவி மற்றும் 4 மாத கைக்குழந்தையுடன் மொட்டை மாடியில் நடந்துகொண்டிருந்தார்.
அப்போது திடீரென குரங்குகள் கூட்டம் அவர்களை சூழ்ந்து கொண்டது. குரங்குகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்ததும், நிர்தேஷ் கீழே இறங்கிச்செல்ல முயன்றுள்ளார். அப்போது குழந்தை கைகளிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளது. அப்போது குரங்குகள் அந்த குழந்தையைத் தூக்கி மாடியிலிருந்து கீழே வீசியுள்ளன.