டெல்லி: ஆசிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டிக்கான அணி விவரங்களை வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே தேர்வு செய்துவிட்டது. இந்நிலையில் ஆசிய ஒருநாள் கோப்பைக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இன்று (ஆக்ஸ்ட் 21) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 13வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்ட நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தேர்வாகும் அணியே உலக கோப்பை தொடரிலும் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணியில் இடம்பெற வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார்களா என்ற எதிர்பார்க்கப்படுகிறது. திலக் வர்மா இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க:உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சூடு... பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீரர்கள்!
காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் அணிக்கு திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா, அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கேப்டானாக நியமிக்கப்பட்டார். இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே பும்ரா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.