தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடலுக்கடியில் வரவுள்ள 'புல்லட் ரயில்' சேவை ; இந்தியாவில் முதல்முறை - bullet train

இந்தியாவில் முதல்முறையாக மும்பையில் புல்லட் ரயில் சேவையை கடலுக்கடியில் அமைக்கத் திட்டம் வகுத்துள்ளனர்.

கடலுக்கடியில் வரவுள்ள 'புல்லட் ரயில்' சேவை  ; இந்தியாவில் முதல்முறை
கடலுக்கடியில் வரவுள்ள 'புல்லட் ரயில்' சேவை ; இந்தியாவில் முதல்முறை

By

Published : Sep 24, 2022, 6:53 PM IST

மும்பை:போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக பாந்திரா தானே மாவட்டத்தில் காம்பிளக்ஸ் - ஷில்பட்டா புல்லட் ரயில் சேவை அமைக்கப்படவுள்ளது. இத்தகைய சுரங்கப்பாதை அமைக்கவிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும். இந்த திட்டத்திற்கு ஒப்பந்ததாரர்கள் வரவேற்கப்பட்டுள்ளனர்.

மும்பை -தானே நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பகல் மற்றும் மாலை நேரங்களில் நிறைய போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால் மும்பைவாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர். இதற்கு மாற்றாக தேசிய அதிவேக ரயில்வே கார்பரேஷன் புல்லட் ரயில் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.

இது மத்திய அரசின் லட்சியத் திட்டமாகும். இதற்கு கடந்த மகா விகாஸ் அகாதி அரசில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தற்போது சிண்டே - பட்னாவிஸ் ஆட்சியில் இந்த திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடலுக்கடியில் கட்டப்படவுள்ள இந்த சுரங்கப்பாதை 7 கி.மீ வரை நீளம் கொண்டதாகும். இந்த சுரங்கப் பாதையை வடிமைக்க ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளனர்.

இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீரில் அக்.2ஆம் தேதி முதல் மின்சார ரயில் சேவை

ABOUT THE AUTHOR

...view details