தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசம் வன்முறை: முக்கிய புள்ளிகளின் வீடுகள் இடிப்பு - up violence

உத்தரப் பிரதேச மாநிலத்தில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டோரின் வீடுகளை மாவட்ட நிர்வாகம் இடித்துவருகிறது.

உத்தரப் பிரதேசம் வன்முறை
உத்தரப் பிரதேசம் வன்முறை

By

Published : Jun 12, 2022, 5:12 PM IST

லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனியார் தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. இவருக்கு டெல்லியை சேர்ந்த பாஜக நிர்வாகி நவீன் குமார் ஆதரவு தெரிவிக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இவர்கள் இருவரையும் கைது செய்யுமாறு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) போராட்டங்கள் நடந்தன. அப்போது போராட்டக்காரர்கள் போலீஸ் வாகங்களுக்கு தீ வைத்தும், கல் வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது வன்முறையில் ஈடுபட்ட 304 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேருடைய வீடுகள் சட்டவிரோத கட்டப்பட்டுள்ளதாக கூறி நேற்று (ஜூன் 11) இடிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று (ஜூன் 12) பிரயாக்ராஜில் உள்ள மேலும் ஒருவரது வீடு ஜேசிபி வாகனம் மூலம் இடிக்கப்பட்டது.

அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கையில், இவரது வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக கடந்த மே மாதமே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனடிப்படையிலேயே இன்று இடிக்கப்பட்டது. அதோடு வன்முறையில் முக்கியப் புள்ளியாக செயல்பட்டோரின் வீடுகளே இடிக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:மனைவி கண்முன்னே சுட்டுக்கொலை... பஞ்சாப்பில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்...

ABOUT THE AUTHOR

...view details