ஜெய்ப்பூர்: காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் இந்த பதவிக்கு போட்டியிடுகின்றனர். சோனியா காந்தியின் தீவிர ஆதரவாளரான அசோக் கெலாட் தலைவராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு கெலாட் காங்கிரஸ் தலைவரானால், ராஜஸ்தானின் அடுத்த முதலமைச்சர் யார்..? என்ற பேச்சு எழுந்துள்ளது. கெலாட் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால், அனைத்து எம்எல்ஏக்களும் சச்சின் பைலட்டுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் அண்மையில் கூறியிருந்தார்.