உத்தரப் பிரதேசம் மாநிலம் சேகதபீர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று (செப். 29) வழக்கம்போல் பாடம் எடுக்கப்பட்டு மாலையில் வகுப்பறைகள் பூட்டப்பட்டன. அப்போது 1ஆம் வகுப்பு வகுப்பறையில் தூங்கிக்கொண்டிருந்த மாணவியை ஊழியர்கள் கவனிக்கவில்லை. அதன்பின் மாணவி வீட்டிற்கு வராததால் பெற்றோர் ஊர் முழுக்க தேடி அலைந்து, இறுதியாக வகுப்பறைக்குள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
உபியில் 18 மணி நேரமாக வகுப்பறைக்குள் பூட்டப்பட்ட 1ஆம் வகுப்பு மாணவி... ஆசிரியர்கள் சஸ்பெண்ட்... - மாணவி பூட்டப்பட்ட வகுப்பறைக்குள் அழுது கொண்டிரு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வகுப்பறையில் தூங்கிய மாணவியை கவனிக்காமல் பூட்டிவிட்டு சென்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Etv Bharatசிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டி சென்ற ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
இருப்பினும் மாணவி 18 மணி நேரமாக வகுப்பறைக்குள் தவித்துள்ளார். பள்ளி நிர்வாகத்தில் கவனக்குறைவே அதற்கு காரணம் என்று பெற்றோருடன் கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியின் தலைமையாசிரியர் உள்பட 2 ஆசிரியர்கள், ஊழியர்களைசஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:டார்ஜிலிங் ஹோட்டலில் இஸ்ரேல் நாட்டு இளைஞர் உயிரிழப்பு