தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Heavy Rain: காரைக்காலில் இடிந்துவிழுந்த கட்டடம் - building collapsed in karaikal

காரைக்காலில் பழமைவாய்ந்த வீடு இடிந்து விழுந்ததால் அப்பகுதி முழுவதும் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

இடிந்து விழுந்த கட்டிடம்
இடிந்து விழுந்த கட்டிடம்

By

Published : Dec 2, 2021, 10:14 AM IST

புதுச்சேரி: காரைக்காலில் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்துவந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆறு, குளம், வாய்க்கால், சாலை என எங்கும் மழை வெள்ளம் நிரம்பி வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது.

இதனிடையே நேற்று (டிசம்பர் 1) நாகப்பட்டினத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் சிவவர்ம மனோகருக்குச் சொந்தமான வீட்டில் இடி விழுந்தது. மிகவும் பழமையான வீடு என்பதால், இந்த வீடு உடனே இடிந்து விழுந்தது.

காரைக்காலில் இடிந்து விழுந்த கட்டடம்

நல்வாய்ப்பாக அச்சமயம் அங்கு யாரும் இல்லாத காரணத்தினால், எந்த உயிர்ச்சேதமும் இல்லை. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் போக்குவரத்தை வேறு வழியாக மாற்றிவிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏம்.ஹெச். நாஜிம் இடிபாடுகளைப் பார்வையிட்டார்.

இதையும் படிங்க:தரமற்ற கட்டுமானம்: மழைக்கு தாங்க முடியாமல் இடிந்து விழுந்த பாலம்!

ABOUT THE AUTHOR

...view details