தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரபல தொழிலதிபர் வீடு புகுந்து சுட்டுக்கொலை! - மகாராஷ்டிராவில் கட்டுமான தொழிலதிபர் சுட்டுக்கொலை

மகாராஷ்டிராவில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த பிரபல தொழிலதிபர் தன் வீட்டின் முன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரபல தொழிலதிபர் வீடு புகுந்து சுட்டுக்கொலை
பிரபல தொழிலதிபர் வீடு புகுந்து சுட்டுக்கொலை

By

Published : Apr 5, 2022, 8:03 PM IST

நாந்தேட் (மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சஞ்சய் பியானி நாந்தேட்டில் உள்ள தனது வீட்டின் முன் பைக்கில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இன்று (ஏப்ரல் 5) காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் பியானியின் கார் ஓட்டுநரும் காயம் அடைந்தார், அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

பட்டப்பகலில் சஞ்சய் வீட்டின் முன் நடத்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், சஞ்சய்க்கும், அடையாளம் தெரியாத ரவுடி கும்பலுக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த கும்பலிடமிருந்து சஞ்சய்க்கு கொலை மிரட்டல் வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை மிரட்டலையடுத்து, சஞ்சய் பாதுகாப்பாளர்களை நியமித்திருந்தார்.

ஆனால் ஆபத்து தவிர்க்கப்பட்டதாகக் கருதி சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பாளர்களை விலக்கியுள்ளார். இந்தநிலையில் தற்போது, சஞ்சய் கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சஞ்சய்யின் வீடு மற்றும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கார் பார்க்கிங்கில் பிரச்சினை - கவுன்சிலர் வெட்டிப் படுகொலை

ABOUT THE AUTHOR

...view details