தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தோட்டத்தில் மேய்ந்த எருமைக் கன்றை மரத்தில் தொங்கவிட்டு கொன்ற நில உரிமையாளர்! - Buffalo died at kottayam

திருவனந்தபுரம்: தனியார் தோட்டத்தில் உணவுக்காக மேய்ந்த எருமைக் கன்றை, நில உரிமையாளர் மரத்தில் தொடங்கவிட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Buffalo calf
கன்று கொலை

By

Published : Mar 2, 2021, 8:27 PM IST

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ராஜுவுக்குச் சொந்தமான எருமை கன்று, மனர்கட் மாலம் பகுதி அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் உணவு தேடி மேய்ந்துள்ளது.

இதைப் பார்த்த நில உரிமையாளர், எருமைக் கன்றைக் கயிற்றால் கட்டி ரப்பர் மரத்தில் தொங்கவிட்டுள்ளார். இதில், எருமை உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ், தனியார் நில உரிமையாளர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், எருமைக் கன்று மூச்சுத் திணறி உயிரிழந்தது உறுதியானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:தேனியில் மதுபோதையில் கொலை: காவல் நிலையம் முற்றுகை!

ABOUT THE AUTHOR

...view details