புதுடெல்லி : குடியரசுத் தலைவர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் 12 மணிக்கும் மேல் நீடித்தது. மாநிலங்களவையை பொருத்தவரை எந்தவொரு இடையூறும் இன்றி நகர்ந்தது. அந்த வகையில் 100 சதவீதம் பட்ஜெட் கூட்டத்தொடரில் உள்ள நேரத்தை மேல் சபை முழுமையாகப் பயன்படுத்தியது.
முன்னதாக 2022ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி அமர்வு ஜன.31 முதல் பிப்.11 வரையிலும், இரண்டாம் பகுதி அமர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
நாட்டிற்கு நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் 48 பில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் உலக முதலீட்டாளர் சமூகம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு சான்றாகும் எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியிருந்தார்.