நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி வரை இந்த பட்ஜெட்டின் முதல் பகுதி நடைப்பெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று (மார்ச் 14) ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட, பஞ்சாப், கோவா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தற்போது நடந்த முடிந்த நிலையில் 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத் மி கட்சி வெற்றி பெற்றது. இந்த கூட்டத்தில் அமோக வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ளவுள்ளனர்.இதில், உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.