தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2023 மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு என்ன இருக்கிறது!

கரோனாவுக்குப் பிந்தைய மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட்டுகளில், மாநில அரசுகளுக்கான நிதிப் பலன்கள் மற்றும் பணப் பகிர்வுகள் அதிகரித்துள்ளன.

பட்ஜெட்
பட்ஜெட்

By

Published : Jan 27, 2023, 6:59 PM IST

டெல்லி:இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 112-வது விதிகளின்படி, மத்திய அரசு தனது மதிப்பிடப்பட்ட வருவாய் மற்றும் செலவினங்களை வருடாந்திர நிதி நிலை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை பட்ஜெட் பிரதிபலித்தாலும் அதில் இருந்து பெரும் தொகை மத்திய அரசின் நேரடி மற்றும் நிதியுதவித் திட்டங்களுக்கும், மாநிலங்களின் பிறத் திட்டங்களுக்கும் நிதியாக வழங்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டில் இருந்து ஏறத்தாழ 40 லட்சம் கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் பங்கு பகிர்வு, மானியம் மற்றும் கடன், மத்திய அரசு வழங்கும் திட்டங்களின்கீழ் நிதியை விடுவிப்பது உட்பட மாநிலங்களுக்கு மாற்றப்படும் மொத்த வளங்களின் மதிப்பு 16.11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதி ஆண்டில் பணப் பரிமாற்றங்களைக் காட்டிலும் இது கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாய் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான மொத்தப் பரிமாற்றம் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய அரசின் மொத்த பட்ஜெட் செலவினத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக ஏறத்தாழ 39.45 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2019- 20 நிதி ஆண்டை தவிர்த்து, மற்ற நிதி ஆண்டுகளில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு ஏற்றத்தைக் கண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார சுணக்கம் உள்ளிட்ட காரணங்களால் துவண்ட மாநில அரசுகளுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களை வழங்க, உதவும் வகையில் 2019 நிதி ஆண்டுக்குப் பிந்தைய நிதி பகிர்வு கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த 2020-21 நிதி ஆண்டில் மாநிலங்களுக்கான மத்திய அரசின் மொத்த பணப் பரிமாற்றம் 15 சதவீதம் அதிகரித்து 13.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் 2020 - 21 நிதி ஆண்டும், மாநிலங்களுக்கான பணப் பரிமாற்றங்கள் 13.89 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ராகுல் யாத்திரையில் மீண்டும் பாதுகாப்பு குளறுபடி.. பாதுகாவலர்கள் திரும்பப்பெறப்பட்டதாக புகார்

ABOUT THE AUTHOR

...view details