தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிதிநிலை அறிக்கை வருங்கால வளர்ச்சிக்கான அம்சங்களை உள்ளடக்கியது - நிதி அமைச்சர் - 2022 மத்திய அரசு பட்ஜெட்

நடப்பு ஆண்டிற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 விழுக்காடாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை
2022ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை

By

Published : Feb 1, 2022, 12:18 PM IST

டெல்லி:மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையானது உற்பத்தி திறன், கால நிலை தொடர்பான நடவடிக்கை, நிதி முதலீடு மற்றும் பிரதமரின் கதி ஷக்தி திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது எனவும், வருங்கால வளர்ச்சிக்கான அம்சங்களை உள்ளடக்கியது என தெரிவித்துள்ளார்.

மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய அனுதாபத்தையும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். “உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

மேலும், நடப்பு ஆண்டிற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 விழுக்காடாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதையும் படிங்க:மத்திய பட்ஜெட் 2022-23 தாக்கல் நேரலை

ABOUT THE AUTHOR

...view details