புது டெல்லி:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில்,2022-23 காலகட்டத்தில் இ.பாஸ்போர்ட் முறை அமலுக்கு வரவிருப்பதாக தெரிவித்தார்.மேலும்,அதில் முக்கியப் பாதுகாப்புத் தகவல்கள் கொண்ட ’சிப்’ பொறுத்தப்பட்டிருக்கும் எனவும் அவர் கூறினார்.
இதன் மூலம்,’சிப்’பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்கள் பயன்பாட்டிற்கு வரும்.இந்த வகையான பாஸ்போர்ட்களில் அதிக பாதுகாப்பு வசதிகளும் உள்ளடங்கியிருக்கும்.இதனால்,குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள் ’சிப்’ பில் பாதுகாப்பாக டிஜிட்டல் முறையில் பதியப்பட்டிருக்கும்.