தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 1, 2021, 12:07 PM IST

Updated : Feb 1, 2021, 12:20 PM IST

ETV Bharat / bharat

பட்ஜெட் 2021: தமிழ்நாட்டில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.1.03 லட்சம் கோடி அறிவிப்பு!

டெல்லி: 2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு என 1.03 லட்சம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல்செய்தார். தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு அதிகபட்சமான நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பொருளாதார வழித்தடங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக அளவிலான பொருளாதார வழித்தடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு என 1.03 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சாலைகளை அமைப்பதற்கு என 65,000 கோடி ரூபாயும் மேற்குவங்கத்திற்கு 25,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

நிதிநிலை அறிக்கை

சென்னையில் 118 கிமீ தூரத்திற்கு 63,000 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுப்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை-கொல்லம், கன்னியாகுமரி-கேரளா ஆகிய பகுதிகளுக்கு இடையே நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Feb 1, 2021, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details