தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'2011-12 வரை IGNOUவில் பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களின் சான்றிதழ் செல்லுபடியாகும்' - இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைகழகம் பொறியியல் படிப்பு

இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் 2011-12ஆம் ஆண்டுவரை பொறியியல் பட்டம் படித்த மாணவர்களின் சான்றிதழ் செல்லுபடியாகும் என ஏ.ஐ.சி.டி.இ. அறிவித்துள்ளது.

AICTE
AICTE

By

Published : Jan 10, 2021, 6:32 PM IST

Updated : Jan 10, 2021, 7:08 PM IST

இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம்(IGNOU) முன்பு, தொலைதூரக்கல்வி மூலம் பி.டெக் மற்றும் பொறியியல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பட்டப்படிப்புகளை வழங்கிவந்தது. எனினும், இந்த படிப்புகள் பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக இருந்ததால், இவை தடை செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்தப் படிப்புகளில் சேர்ந்து பட்டம் பெற்றவர்களின் சான்றிதழ் செல்லுபடி ஆகுமா என சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2009-10ஆம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களின் பட்டம் செல்லுபடியாகும் என 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை முன்னுதாரணமாகக் கொண்டு, மற்ற ஆண்டு மாணவர்களும் மேல் முறையீடு செய்திருந்தனர். அதை விசாரித்து நீதிமன்றம் 2010-11 மற்றும் 2011-12ஆம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ் செல்லுபடியாகும் எனத் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்பதாக தெரிவித்த அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு, IGNOU இனி இந்த படிப்புகளை தொடர்கூடாது எனவும் இந்த ஒப்புதல் 2011-12 வரை படித்த மாணவர்களுக்கு மட்டுமே எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:மூன்றாம் பாலினத்தவருக்கு பிரத்தியேக அடையாள அட்டை; முன்னுதாரணமாக திகழும் மத்தியப் பிரதேசம்

Last Updated : Jan 10, 2021, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details