பங்களாதேஷ் நாட்டின், டாக்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஹசனூர் ஜமால் அபிக் (12) என்ற சிறுவன் இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்த நிலையில், எல்லையோரக் காவலர்கள் அச்சிறுவனை பங்களாதேஷுக்கு நேற்று (ஜூன்.08) பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறுவனை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்த எல்லைக் காவலர்கள் - இந்திய எல்லைக் காவலர்கள்
புதுடெல்லி: மனிதாபிமான அடிப்படையில், இந்திய எல்லைக்குள் நுழைந்த பங்களாதேஷ் சிறுவனை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பிவைத்தனர்.
இந்திய எல்லைக்குள் நுழைந்த பங்களாதேஷ் சிறுவனை திருப்பி அனுப்பிய பிஎஸ்எஃப்
இச்சிறுவன் ஜூன் 6ஆம் தேதி டாக்கி என்னும் கிராமத்தில் சுற்றித் திரிந்ததைக் கண்ட உள்ளூர்வாசிகள் சிறுவனை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, எல்லையோரக் காவலர்கள் மனிதாபிமான அடிப்படையில் அச்சிறுவனை அவனது நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.