தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தின் கட்ச்சில் 'ஹை-அலர்ட்' - உஷார் நிலையில் பிஎஸ்எஃப்! - எல்லை பாதுகாப்பு படை

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு எல்லை பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குஜராத்
குஜராத்

By

Published : Jul 29, 2021, 7:10 PM IST

பாகிஸ்தான் - சீனா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை அதிகப்படுத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தின் சர்வதேச எல்லையில் கண்காணிப்பை அதிகரிக்க எல்லை பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கட்ச் மாவட்ட சர்வதேச எல்லையில் பிஎஸ்எஃப் ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்ளது.

குஜராத்தின் கட்ச்சில் 'ஹை-அலட்'

கட்ச் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவிய சம்பவங்கள் அதிகளவில் நடந்துள்ளதால் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15, ஜனவரி 26 ஆம் தேதிகளுக்கு முன்பு எச்சரிக்கை விடுவது வழக்கம். மேலும், எல்லை பாதுகாப்புப் படையினர், கடலோர காவல் படையினர், கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் அப்பகுதியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிப்பு

இதுகுறித்து நமது ஈடிவி பாரத்துடன் தொலைபேசி வாயிலாக பேசிய பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜி.எஸ்.மாலிக், " ஆகஸ்ட் 15 அன்று குஜராத் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் தலைமையகத்தில் குறைந்தபட்ச ஊழியர்களே இருப்பார்கள். மற்றவர்கள் அனைவரும் எல்லையில் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்படுவார்கள். கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:7 கோடி ஃபாலோயர்ஸ்: மாஸ் காட்டும் மோடி

ABOUT THE AUTHOR

...view details