தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய எல்லைக்குள் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன்

பாஞ்சாப்பில் பாகிஸ்தானை சேர்ந்த ட்ரோன் விமானம் ஒன்று நுழைந்ததை அடுத்து, எல்லை பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்த முயன்றனர்.

பாகிஸ்தான் ட்ரோன்
பாகிஸ்தான் ட்ரோன்

By

Published : Oct 28, 2021, 11:03 PM IST

அம்ரித்சர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியான பஞ்சாப்பில் கடந்த இரண்டு மாதங்களாக பாகிஸ்தானின் ட்ரோன் விமானங்கள் நுழைவது வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில், அஜ்னாலா காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பிஓபி சாஹ்பூர் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் விமானம் இன்று (அக். 28) அத்துமீறி நுழைந்துள்ளது.

இந்த பகுதியில், மூன்றாவது பட்டாலியனை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையினர் பணியிருந்த நிலையில், விமானத்தை சுடத்தொடங்கியுள்ளனர். இருப்பினும், அந்த விமானம் பாகிஸ்தான் பகுதிக்கு தப்பிவிட்டது.

ட்ரோன் மூலம் கடத்தல்கள்

மேலும், பாதுகாப்பு படையினர் ட்ரோன் வந்து சென்ற இடத்தில் ஏதும் பொருள் விட்டுச்சென்றுள்ளதா என்ற ரிதீயில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் இருந்து வரும் ட்ரோன் விமானங்கள் போதைப்பொருள், ஆயுதக்கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற, அத்துமீறலை தடுக்க இந்திய ராணுவத்தினர் பல தடுப்பு நடவடிக்கையில் மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த அக். 2ஆம் தேதி பாகிஸ்தான் ட்ரோன் விமானம் ஒன்று ஜம்முவின் பாலீயன் மண்டல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது. இந்த வழக்கில் ஜம்மு காவல்துறையினர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க: 2ஜி விவகாரம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட முன்னாள் சிஏஜி வினோத் ராய்!

ABOUT THE AUTHOR

...view details