தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கவனக்குறைவால் இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தானியர்கள்: மனிதாபிமான அடிப்படையில் விடுவித்த இந்தியா

கவனக்குறைவால் இந்திய எல்லைக்குள் வந்த இரண்டு பாகிஸ்தானியர்களை மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல், பாகிஸ்தான் அரசிடம் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஒப்படைத்துள்ளது.

BSF hands over two Pakistani nationals to Pak Rangers
கவனக்குறைவால் இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தானியர்கள்: மனிதாபிமான அடிப்படையில் விடுவித்த இந்தியா

By

Published : May 23, 2021, 6:21 PM IST

டெல்லி:கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் வந்த இரண்டு பாகிஸ்தானியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் அரசிடம் இன்று எல்லைப் பாதுகாப்பு படை ஒப்படைத்துள்ளது.

இதுதொடர்பாக எல்லைப் பாதுகாப்பு படை பஞ்சாப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இரண்டு பாகிஸ்தானியர்கள் நேற்று இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதைக் கண்டோம். உடனடியாக அவர்களைக் கைது செய்து விசாரணை செய்தோம். அவர்களிடம் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் இல்லை. கவனக்குறைவால் அவர்கள் இந்திய எல்லைக்குள் வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மனிதாபிமான அடிப்படையில் அவர்களை பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் ஒப்படைத்தோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தாண்டு மட்டும் கவனக்குறைவால் இதுபோல் இந்திய எல்லைக்குள் வந்த 6 பேர் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற 13 வங்கதேசத்தினர் கைது!

ABOUT THE AUTHOR

...view details