தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஞ்சாப் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்! - tamil latest news

பஞ்சாபில் ஊடுருவ முயன்ற மற்றொரு ட்ரோனை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

பஞ்சாபில் பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்
பஞ்சாபில் பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்

By

Published : Dec 22, 2022, 11:42 AM IST

பெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலம் டார்ன் தரான் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையான பெரோஸ்பூர் செக்டாரில் பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி மீண்டும் ஊடுருவ முயன்ற ட்ரோன் ஒன்றை எல்லை பாதுகாப்புப் படையினர் (BSF)சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நேற்று இரவு 8 மணியளவில், ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. தற்போது அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, இரவில் ட்ரோனைத் தேடும் பணி நடத்தப்பட்டது.

இந்நிலையில் காலை 8 மணியளவில், பாதுகாப்பு படையினர் ஒரு பண்ணையில் இருந்து ஆளில்லா விமானத்தை மீட்டனர். சமீப காலமாக பல ட்ரோன் ஊடுருவல் முயற்சிகளை எல்லை பாதுகப்பு படை முறியடித்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாஸ்க் கட்டாயமா? - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சொன்னது இதுதான்

ABOUT THE AUTHOR

...view details