தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பூஞ்ச் எல்ஓசியில் கண்ணிவெடி... கண்டுபிடித்த ஜூலி!

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியைப் பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்தினர்.

பூஞ்ச்
பூஞ்ச்

By

Published : Aug 1, 2021, 4:54 PM IST

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தர் பகுதியில் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் ஜூலியுடன், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஜூலி நாய் ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டதால், பாதுகாப்புப் படையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் தீவிர சோதனையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கண்ணிவெடி இருப்பது தெரியவந்தது. கண்ணிவெடியை மீட்ட பாதுகாப்பு படையினர், அதனை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தினர்.

இங்கு கண்ணிவெடி எப்பது வந்தது என்பது குறித்து காவல் துறையினரும், பாதுகாப்பு படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் ‘மும்பை பிளஸ்’ திட்டம்

ABOUT THE AUTHOR

...view details