இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 6 பாகிஸ்தானியர்கள் கைது - Pakistan intrusion in Indian border
12:09 January 09
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஆறு பாகிஸ்தானியர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) கைது செய்துள்ளனர். இவர்கள் ஆறு பேரும் சிறார்கள் (18 வயதுக்கும் குறைவானவர்கள்) என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆறு பேரையும் கூட்டுப் பாதுகாப்பு படையினர், உளவுத்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர். இவர்கள் வழிதவறி எல்லைக்குள் வந்தனரா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் கொண்டு நுழைந்துள்ளார்களா என்பன போன்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.