பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பி.எஸ். எடியூரப்பா தனது பதவியை துறந்த நிலையில், புதிய முதலமைச்சராக மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவிற்கு கேபினெட் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதனைப் பெற மறுத்துள்ள பிஎஸ் எடியூரப்பா, “எனக்கு கேபினெட் அந்தஸ்து வழங்கும் உத்தரவை வாபஸ் பெற்றுவிடுங்கள். எனக்கு முன்னாள் முதலமைச்சருக்கு உரிய சலுகைகள் மட்டும் போதும்” என்று கூறியுள்ளார்.
சென்ற ஜூலை 26ஆம் தேதியன்று ராஜினாமா செய்த எடியூரப்பாவுக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து போன்ற வசதிகளை வழங்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சனிக்கிழமை (ஆக.7) உத்தரவிட்டார்.