பீகார் மாநிலம்சரன் மாவட்டத்திலுள்ளசாப்ரா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் காஜல். இவருக்கு தாஜ்பூர் சேலம்பூரைச் சேர்ந்த பங்கஜ் மஹதோ என்பவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததில் இருந்து மணமகனின் வீட்டார் காஜலிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு மணமகன் வீட்டாரிடம் இருந்து, காஜலின் கை அறுக்கப்படும் வீடியோ பெண் வீட்டாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், மணமகனின் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.