தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பிஆர்எஸ்..! - பிஆர்எஸ்

சந்திர சேகர் ராவ்-இன் தேசிய கட்சியான பிஆர்எஸ் கட்சி மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் களம் காண உள்ளது.

BRS to contest in local body Elections of Maharashtra
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பிஆர்எஸ்

By

Published : Mar 1, 2023, 9:03 PM IST

அடிலாபாத் (தெலங்கானா): தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பாரத ராஷ்டிர சமிதியாக உதயமான பிறகு, முதல் முறையாக வேறு மாநிலத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது. பிஆர்எஸ் கட்சி முதன்முதலில் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரகதி பவனில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் அடிலாபாத் மாவட்ட அரசு கொறடா பால்க சுமன், எம்எல்ஏ ஜோகு ராமண்ணா, முன்னாள் எம்பி கோடம் நாகேஷ் மற்றும் பிற மாநிலத் தலைவர்களுடன் பிஆர்எஸ் தலைவரும், முதலமைச்சருமான கே.சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தினார். செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் தலைவர்களுடன் பேசினார்.

இந்த நீண்ட விவாதத்தில், மகாராஷ்டிராவில் ZP உறுப்பினர் (ZPTC) மற்றும் பஞ்சாயத்து சமிதி உறுப்பினர் (MPTC) தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு பஞ்சாயத்து சமிதியின் அதிகார வரம்பில் மூன்று ZPTC மற்றும் ஆறு MPTC-கள் வரை உள்ளதால் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ZP-யின் தலைவர், ZPTC-கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால், இந்த தேர்தலை முக்கிய தேர்தலாக கருதுவதாகத்தெரிகிறது.

தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக தெலங்கானாவைச் சேர்ந்த பிஆர்எஸ் தலைவர்கள் மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அடிலாபாத் எம்எல்ஏ ஜோகு ராமண்ணா மற்றும் முன்னாள் எம்பி கோடம் நாகேஷ் ஆகியோர் மகாராஷ்டிராவின் யவத்மால், வார்தா மற்றும் வாசிம் மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சந்திராபூர் மற்றும் கட்சிரோலி மாவட்டங்களின் பொறுப்புகள், தெலங்கானா அரசு கொறடா பால்க சுமனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் டிசிசிபி தலைவர் ஆதி போஜாரெட்டி, கட்சியின் மூத்த தலைவர் அரிகேலா நாகேஸ்வர ராவ், பூரணம் சதீஷ் ஆகியோரும் இணைந்து பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்தின் பொறுப்பு ஒதுக்கப்படும். ஹோலி பண்டிகைக்கு பிறகு, பிஆர்எஸ் தலைவர்கள் மகாராஷ்டிராவில் விரிவாக சுற்றுப்பயணம் செய்வார்கள். கிராம அளவிலான தலைவர்களை கட்சிக்குள் கொண்டு வரவும், தெலங்கானாவில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை மக்களுக்கு விளக்கவும் சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிரான தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 3-ல் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details