ஒடிசாவின் பாலசூர் மாவட்டம் ஜலேஸ்வர் பகுதியில் உள்ள லக்ஷ்மண்நாத் சோதனைச்சாவடியில் அம்மாநில குற்றத் தடுப்புச் சிறப்புப் படை அதிரடி சோதனை மேற்கொண்டு மிகப்பெரிய கடத்தலை தடுத்து நிறுத்தியுள்ளது.
போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, அந்தச் சிறப்புப் படை மேற்கொண்ட சோதனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் (brown sugar) பறிமுதல்செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஷேக் முனாஃப் என்ற இளைஞரைக் கைதுசெய்த காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.