தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு யார் ? முழு விவரம் ... - President election 2022

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கும் வேட்பாளர் திரெளபதி முர்மு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மின் பின்னனி என்ன? முழு விவரம் இதோ...
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மின் பின்னனி என்ன? முழு விவரம் இதோ...

By

Published : Jun 22, 2022, 8:15 AM IST

மயூர்பஞ்ச்: திரௌபதி முர்மு ஜூன் 20, 1958 அன்று ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைடாபோசி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் பிரஞ்சி நாராயண் துடு. திரெளபதி சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவர் ஷ்யாம் சரண் முர்மு என்பவரை மணந்தார்.

1997 இல் ராய்ங்பூர் நகராட்சியின் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதிலிருந்து முர்மு அவரது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அதே ஆண்டு ராய்ராங்பூர் நகராட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக முர்மு பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மாநில அரசின் நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரத் துறையின் இளநிலை உதவியாளராக 1983 வரை பணிபுரிந்தார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மின் பின்னனி என்ன? முழு விவரம் இதோ...

2000 மற்றும் 2004 ஆம் ஆண்டு ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராய்ரங்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக முர்மு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பிஜேடி-பாஜக கூட்டணியின் போது, அவர் மார்ச் 6, 2000 முதல் ஆகஸ்ட் 6, 2002 வரை வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

மேலும் ஆகஸ்ட் 6, 2002 முதல் மே 16, 2004 வரை மீன்வளம் மற்றும் விலங்கு வளங்கள் மேம்பாடு அமைச்சராகவும் இருந்தார் . முர்மு ஜார்கண்டின் ஆளுநராகவும் பதவி வகித்தார். ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் முர்மு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details