மோர்பி:குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள மச்சு என்ற ஆற்றை கடப்பதற்காக கேபிள் பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் அக்.30ஆம் தேதி திடீரென அறுந்து விழுந்தது. அந்த நேரத்தில் பாலத்தில் நின்றுகொண்டிருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்தனர். இந்த விபத்தில் 141 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். பலரது உடல் ஆற்றில் அடித்துசெல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத் பாலம் விபத்து நடத்த இடத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு - மோர்பியில் பாலம் விபத்து
குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் அறுந்து 141 பேர் உயிரிழந்த நிலையில் சம்பவயிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.
PM Modi to visit Morbi
தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவயிடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே பிரதமர் மோடி சம்பவயிடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அந்த வகையில், இன்று (நவ.1) மோர்பியில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்கிறார். இந்த விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மோர்பி பால விபத்தில் பாஜக எம்.பி.யின் உறவினர்கள் 12 பேர் பலி