பிகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் சனகஹியா மாய் என்ற கோயிலில் விநோத காரணத்தை சுட்டிக்காட்டி திருமணம் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண ஆசையுடன் மணவறையில் அமர்ந்திருந்த பெண், மாப்பிள்ளையைப் பார்த்ததும் காதலில் விழுவார் என்று எதிர்பார்த்தால், அவரோ தரையில் விழுந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். "இவருக்கு நான் ஓகே சொல்லவில்லை. ஃபோட்டாவில் பார்க்கும் போது, வேற மாதிரி இருந்தார்" என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இதனால் திருமணத்திற்காக வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மணமகளின் பெற்றோர்கள் அவரை சமாதானம் செய்ய முயன்றனர்.