தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வருங்கால கணவரை, கண்ணாமூச்சி ஆட அழைத்து கழுத்தறுத்த பெண்! - ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்

ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் கண்ணாமூச்சி விளையாடுவது போல் ஏமாற்றி மாப்பிள்ளையின் கழுத்தை அறுத்த கொடூரச் சம்பவம் நடந்தேறியுள்ளது.

ஆந்திராவில் திடுக்கிடும் சம்பவம்
ஆந்திராவில் திடுக்கிடும் சம்பவம்

By

Published : Apr 19, 2022, 2:18 PM IST

அமராவதி:ஆந்திராவில் உள்ள மதுகுள தாலுகா காட் ரோட்டைச் சேர்ந்த அத்தேப்பள்ளி ராமா என்பவருக்கு, ரவிகாமத்தைச் சேர்ந்த விய்யாபு புஷ்பா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அடுத்த மாதம் 20ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இருவரும் நேற்று (ஏப்.18) வட்டாடியில் உள்ள கடைக்கு ஷாப்பிங் சென்றுள்ளனர். இளம் பெண்ணின் இரு சக்கர வாகனத்தில் இருவரும் சென்றுள்ளனர்.

ஷாப்பிங்கை முடித்து விட்டு கோமல்லபுரத்தில் உள்ள பாபா ஆசிரமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது மாப்பிள்ளையிடம் நைசாக பேசி கண்ணாமூச்சி விளையாட ஒத்துக்கொள்ள வைத்துள்ளார்.

உடனே ஜாலியாக ஒப்புக்கொண்ட மாப்பிள்ளையின் கண்களை கட்டி வைத்து கண்ணாமூச்சி விளையாட ஆரம்பித்துள்ளார். கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த ராமாவை சரியான சமயம் பார்த்து புஷ்பா கழுத்தை அறுத்துள்ளார்.

பின்னர் அவரது இருசக்கர வாகனத்தில் மாப்பிள்ளையை ஏற்றிக்கொண்டு ரவிகாமத்தில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையத்தில் அவரது கழுத்தில் கூர்மையான பொருள் குத்திவிட்டதாக கூறி அனுமதித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

ராமாவின் உடல்நிலை மோசமானதையடுத்து அனகப்பள்ளி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சற்று இயல்பு நிலைக்கு திரும்பிய ராமா கூறியதாவது,’ அந்தப் பெண்ணுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் தன்னை தாக்கியதாக கூறினார். அனகப்பள்ளி காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கழுத்தறுக்கப்பட்ட மாப்பிளை

இதையும் படிங்க:குளிர்பானத்தில் மயக்க மருந்து; பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details