13ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸின், இந்த ஆண்டு உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கியது.
இதில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களான பிரதமர் நரேத்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ, தென் ஆப்பிரிக்கா சிரில் ரமபோசா ஆகியோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி தலைமை உரை
இந்த மாநாட்டில் உரையற்றிய பிரதமர் மோடி, "கடந்த 15 ஆண்டுகளில் பிரிக்ஸ் அமைப்பு பல சாதனைகளை புரிந்துள்ளது. சர்வதேச அரங்கில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பொருளாதார சக்திகளாக உருவெடுத்து வருகின்றன.