மேகாலயா:மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியிலிருந்து ஷில்லாங்கிற்கு 21 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. கிழக்கு கரோ - மேற்கு காசி மலைப்பகுதி எல்லையில் உள்ள நோங்ஷ்ராம் பாலத்தில் இன்று (செப். 30) அதிகாலை 12 மணியளவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ரிங்டி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது.
இதில் பேருந்து ஓட்டுநர், ஐந்து பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த ரோங்ஜெங், வில்லியம்நகர் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்த 16 பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.