தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிக்பாஸ் போட்டியாளர் மீது நடிகை மீ-டூ புகார் - Bollywood actress Sherlyn Chopra

பாலிவுட் இயக்குநர் சஜித் கான் மீது நடிகை ஷெர்லின் சோப்ரா மகாராஷ்டீரா காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.

Etv Bharatபிக்பாஸ் போட்டியாளர் மீது நடிகை மீ-டூ புகார்
Etv Bharatபிக்பாஸ் போட்டியாளர் மீது நடிகை மீ-டூ புகார்

By

Published : Oct 20, 2022, 10:18 PM IST

மும்பை(மகாராஷ்டீரா):பாலிவுட் இயக்குநர் சஜித் கான் மீது நடிகை ஷெர்லின் சோப்ரா மகாராஷ்டீரா காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். மேலும், இந்தி பிக் பாஸ் 16 சீசனில் பங்கு பெற்றுள்ள போட்டியாளரான இயக்குநர் சஜித்தை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக திரைத் துறையில் உள்ள பிரபலங்கள் #MeToo என்ற இயக்கத்தின் கீழ் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை வெளியே கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஷெர்லின் #MeToo இயக்கத்தின் கீழ் திரைப்பட இயக்குநர் சஜித் மீது பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபடுட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஷெர்லினின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பல நடிகர்கள் சஜித்துடன் இணைந்து பணியாற்ற மறுத்து வருகின்றனர். மகாராஷ்டீரா மாநிலத்தில் புகார் அளித்தற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷெர்லின் கூறுகையில், “ பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ள இயக்குநர் சஜித் கான் மீது புகார் அளிக்க காவல் நிலையம் வந்துள்ளேன்.

பாலிவுட் இயக்குநர் சஜித் கான்

அவர் மீது ஐபிசி 453, 453 ஏ பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளேன். விரைவில் எனது வழக்கு மீதான விசாரணை தொடங்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளதாக’ தெரிவித்தார்.

மேலும் இந்தி பிக்பாஸ் வீட்டிற்குள் சஜித் இருக்கும் வரை பிக் பாஸ் 16 சீசன் நிகழ்ச்சியை நிறுத்துமாறு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறினார். சஜித்தை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுமாறு பிக் பாஸ் நிர்வாகத்திடம் நான் கோரிக்கை விடுத்துள்ளேன், ஆனால் அவர்கள் எங்கள் வலியை புரிந்து கொள்ளவில்லை எனவும் கூறினார்.

இதையும் படிங்க:பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா..ஜி.பி.முத்து? அதிர்ச்சியில் ஆர்மி..

ABOUT THE AUTHOR

...view details