காந்திநகர்: குஜராத்தின் அப்டசா, மொர்பி, கர்ஜன், தாரி, கட்டா, கப்ரடா, டங், லிம்ப்டி ஆகிய எட்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று (நவம்பர் 10) அறிவிக்கப்பட்டன. இந்த எட்டு தொகுதிகளிலும் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த பாஜக, வெற்றியை பெற்றுள்ளது.
குஜராத் இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு வெற்றி - குஜராத் இடைத்தேர்தல்
நடைபெற்று முடிந்த குஜராத் இடைத்தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
![குஜராத் இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு வெற்றி Breaking Gujarat: By- Poll 8 seats result update](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9499387-908-9499387-1605006974757.jpg)
Breaking Gujarat: By- Poll 8 seats result update
மாநிலங்களவை தேர்தலுக்கு முன்பு 8 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகினர். இதன் காரணமாக மாநிலங்களவையில் பாஜக வெற்றி பெற்றது. பதவி விலகியதில் 5 நபர்கள் பாஜகவில் இணைந்து இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.