போபால்: மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் புதிதாக அணை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 80 விழுக்காடு முடிந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக அணைக்கு அதிகப்படியான தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த அளவுகளின் அடிப்படையில் பொறியாளர்கள், விரைவில் அணை நிரம்பிவிடும் என்று கணித்துள்ளனர்.
வேகமாக நிரம்பி வரும் அணையால் 11 கிராமங்களை காலி செய்ய உத்தரவு - மத்தியப் பிரதேச அணை
மத்தியப் பிரதேச மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் அணைக்கு அதிகப்படியான தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் பதினொரு கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
இதனால் அணைக்கு அருகில் உள்ள 11 கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (ஆக 12) பிற்பகல் முதல் மக்கள் வீடுகளை காலி செய்யத்தொடங்கிவிட்டனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில், வெளியேறும் தண்ணீர் கிராமங்களுக்குள் நுழையாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தாண்டு வழக்கத்தை விட அதிகமாக பருவமழை பெய்துவருவதால் அணை விரைவில் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஏடிஎம் இயந்திரம் - ரூ. 24 லட்சம் மாயம்