டெல்லி:லடாக்கின் கல்வான் மோதலின் போதும், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மோதலின் போதும் நாட்டின் ராணுவ வெளிப்படுத்திய துணிவும், வீரமும் பாராட்டுக்குரியது. அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. நாங்கள் எதிர்க்கட்சித் தலைவர்களின் நோக்கத்தை ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை. கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே கேள்வி எழுப்பினோம்.
பொதுவாக அரசியல் விமர்சனங்கள் உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். பொய்யின் அடிப்படையில் அரசியல் செய்ய முடியாது எனத் தெரிவித்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டதை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார்.