மும்பை:ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தெரசா பெர்னாண்டஸ், உலக சுற்றுலா பயணமாக பல நாடுகளுக்கு சென்று வந்தார். அந்த வகையில் ஜனவரி 5ஆம் தேதி இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக மும்பை வந்தார். அங்கு எலிபெண்டா குகைகளை சுற்றி பார்த்த அவர், ஜனவரி 7ஆம் தேதி தென் மும்பை பகுதியில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். தெரசாவை உடனடியாக மீட்ட சக பயணிகள், அவரை ஜாஸ்லோக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தெரசாவின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை கண்டறிந்தனர். தெரசா பெர்னாண்டசின் மூளையின் முக்கிய பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால், மூளையின் அழுத்தத்தை குறைக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால், அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் மூளை சாவு அடைந்தார்.