ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குருவைய்யா,புஷ்பலதா தம்பதியினருக்கு, ஏழு வயதில் விராட் என்ற மகன் உள்ளான்.
இவர்கள் திருமண நிகழ்ச்சிக்காக சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அப்போது, அனைவரும் டிவியில் படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அதில், சோனு சூட் வில்லனாக நடத்திருந்தார்.
இந்நிலையில், படத்தில் வந்த சண்டை காட்சியில் கதாநாயகன் மகேஷ் பாபு, சோனு சூட்டை அடித்து உதைக்கும் காட்சி வந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ளமுடியாத சிறுவன், ஒரு கட்டத்தில் கல்லை கதாநாயகனை நோக்கி வீசியுள்ளான். இதில், டிவி உடைந்து நொறுங்கியது.
சீறிய சிறுவனால் சின்னாபின்னமான டிவி இதை எதிர்பாராத உறவினர்கள், சிறுவனிடம் ஏன் டிவி யை உடைத்தாய் என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த சிறுவன், சோனு சூட் தனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரை அடிக்கும் காட்சிகள் பிடிக்காததால் கல்லை எறிந்தேன் என கூறியுள்ளான். சிறுவனின் பதிலால், அனைவரும் திக்குமுக்காடிச் சென்றனர்.
இச்சம்பவம் சமூக வலைதளம் வாயிலாக நடிகர் சோனு சூட்டின் காதிற்கும் எட்டியுள்ளது.
இதைக் கேட்டு வியப்படைந்த அவர், டிவியை உடைக்க வேண்டாம், அப்புறம் உங்கள் தந்தை என்னிடம் தான் டிவி வாங்கித்தரச்சொல்லிக் கேட்பார் என்று ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க:கார் பேனட்டில் அமர்ந்து போட்டோ ஷூட்... போலீஸில் சிக்கிய கேங்...