புதுச்சேரி:மங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சந்திரசேகருக்கு, தீபக் (22) என்ற மகன் இருந்துள்ளார். சிவில் பொறியியல் பட்டதாரியான தீபக் கடந்த ஆண்டு கரோனா காலத்திற்குப் பிறகு மிக அதிகமாக கணினி, மொபைல் போனில் ஆன்லைன் கேம் (online game Suicide) விளையாடியுள்ளார்.
அதன் பிறகு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாள்களாக தான் மிகுந்த மனச்சோர்வில் இருப்பதாகவும், அதனால் தன்னிடம் பேசாதீர்கள் என்றும், தான் கோபமாக இருப்பதாகவும் வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில் தீபக் சனிக்கிழமை இரவு (நவம்பர் 20) திடீரென தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.