ஹரியானா:ஹரியானா மாநிலம் அம்பாலாவில், 12ம் வகுப்பு மாணவன் யாஷ்(15) குளிர்பான பாட்டிலின் மூடியை வாயால் கடித்து திறக்க முயன்றுள்ளான். தனது சகோதரியால் பாட்டிலின் மூடியை திறக்க முடியாததால், சிறுவன் திறக்க முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது, மூடி அவனது சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்டது.
கூல்டிரிங்க்ஸ் மூடியை வாயால் திறந்த சிறுவன்.. தொண்டையில் மூடி சிக்கிக்கொண்டதால் மரணம்.. - ஹரியானா மாநிலம் அம்பாலா
ஹரியானா மாநிலத்தில் குளிர்பான பாட்டில் மூடி சுவாசக் குழாயில் சிக்கி 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
![கூல்டிரிங்க்ஸ் மூடியை வாயால் திறந்த சிறுவன்.. தொண்டையில் மூடி சிக்கிக்கொண்டதால் மரணம்.. Boy chokes](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15346846-80-15346846-1653133499193.jpg)
Boy chokes
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், சுவாசக் குழாயில் சிக்கிய மூடியை எடுக்க முயற்சித்தனர். ஆனால் அது பலன் அளிக்காததால் உடனடியாக சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி சிறுவன் உயிரிழந்தான். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.