டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (ஜூலை 18) தொடங்கியது. கடந்த இரண்டு நாள்களும் கடும் அமளியால், நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (ஜூலை 20) இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின.
புதிதாக சில பொருள்கள் மீது போடப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியால் அந்த பொருள்களின் விலை ஏற்றம் அடைந்ததை கண்டித்தும், பணவீக்கம் குறித்தும் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். தயிர், பிரெட், பன்னீர் போன்ற பல பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்கக்கோரி எதிர்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், திமுக, இடதுசாரி உறுப்பினர்கள் அவையில் கோஷமிட்டனர்.