தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இனி மாதம் 24 ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்... ஆனால்? - ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் முன்பதிவு உச்சவரம்பு அதிகரிப்பு

ஐஆர்சிடிசி பயனர் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால், இனி மாதம் 24 ரயில் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இனி மாதம் 24 ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
இனி மாதம் 24 ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

By

Published : Jun 6, 2022, 9:27 PM IST

டெல்லி:ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான உச்ச வரம்பை அதிகரித்து ரயில்வே அமைச்சகம் இன்று (ஜூன் 6) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஐஆர்சிடிசி பயனர் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால், இனி மாதம் 24 ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய கொள்ளலாம். ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், அதாவது ஆதார் இணைக்கப்படாத கணக்கு மூலமாக 12 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த உச்ச வரம்பு ஐஆர்சிடிசி பயனர் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மாதம் 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், ஆதார் இணைக்கப்படாத கணக்காக இருந்தால் 6 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இருந்தது. பயணிகளுக்கு வசதியாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கும், ஒரே கணக்கு மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் இந்த வசதி உதவியாக இருக்கும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details