டெல்லி:ஈரான் நாட்டிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று இந்திய வான்வெளி பரப்பு வழியாக சீனா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனிடையே அந்த விமானத்தின் விமானிகள் இந்தியாவில் தரையிறங்க அனுமதி கோரியுள்ளனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய வான்வெளியில் ஈரானிய விமானம்... வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு... - IAF jets scrambled
இந்திய வான் எல்லையில் பறந்த ஈரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய வான்வெளியில் பறந்த ஈரானிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
இருப்பினும் பாதுகாப்பு கருதி, பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமான படை தளங்களில் இருந்து விமானப்படையின் Su-30MKI போர் விமானங்கள் ஈரானிய விமானத்தை கண்காணிக்க அனுப்பட்டன. அந்த ஈரானிய விமான சீனா நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தியால் பரபரப்பு நிலவிவருகிறது.
இதையும் படிங்க:பயங்கரவாதிகளுடன் சேர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி - 3 பேர் கைது!