தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரஷ்யாவிலிருந்து டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - Bomb threat on Delhi airport

மாஸ்கோவிலிருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால், அந்த விமானத்தில் தீவிர சோதனை செய்யப்பட்டது.

ரஷ்யாவிலிருந்து டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ரஷ்யாவிலிருந்து டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

By

Published : Oct 14, 2022, 11:25 AM IST

டெல்லி:ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக விமானநிலைய அலுவலர்களுக்கு மிரட்டல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அலுவலர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் அதிகாலை 3.20 மணியளவில் தரையிறங்கிய அந்த விமானத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதற்காக பயணிகள், விமான ஊழியர்கள் அவசர கதியில் வெளியேற்றப்பட்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் விமானம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை செய்யப்பட்டுவருவதாக விமானம் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 வாரங்களுக்கு முன்பு ஈரான் நாட்டிலிருந்து புறப்பட்டு இந்திய வான்வழியாக சீனா நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதும், அதன் காரணமாக அந்த விமானத்தின் விமானிகள் இந்தியாவில் தரையிறங்க அனுமதி கேட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்திய வான்வெளியில் ஈரானிய விமானம்... வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு...

ABOUT THE AUTHOR

...view details