தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்கத் தேர்தல்: 200 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! - Bomb squad disposes multiple bombs

கொல்கத்தா:  நானூரில் சமுதாயக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளைக் காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.

country-made bombs f
கொல்கத்தா

By

Published : Apr 10, 2021, 12:53 PM IST

மேற்கு வங்கம் மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 10) நான்காம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், பிர்பம் மாவட்டத்தின் நானூரில் உள்ள சமுதாயக் கூடத்திலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளைக் காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.

இவ்விவகாரத்தில் இதுவரை மூன்று பேரைக் கைதுசெய்துள்ளனர். மேலும், பறிமுதல்செய்யப்பட்ட வெடிகுண்டுகளை, கிராமத்திற்கு வெளியே வெடிகுண்டு நிபுணர்களால் வெடிக்கவைத்துச் செயலிழக்கச் செய்யப்பட்டது.

இதேபோல, மாநிலத்தில் பல்வேறு இடங்களில் திருணமூல் காங்கிரஸ், பாஜக கட்சி தொண்டர்களிடையே தாக்குதல் நடந்துவருகிறது. குறிப்பாக பாஜக தலைவர் லாக்கெட் சாட்டர்ஜி, ஹூக்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தாக்கப்பட்டார்.

அதேபோல, கூச் பெஹார் மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டு வன்முறைச் சம்பவம் நிகழ்ந்தது. இதில், நான்கு பேர், மத்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:மேற்கு வங்கத்தில் வன்முறை: நான்கு பேர் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details