திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இன்று (ஜூலை 12) அதிகாலை குண்டு வீசப்பட்டது. இந்த குண்டு வீச்சில் அலுவலகத்தின் உள்ளே இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இதுகுறித்து, கண்ணூர் காவல் துறையினர் ஊடகங்களுக்கு தகவல் அளித்தனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) அலுவலகத்தில் சில நாள்களுக்கு முன்னர் குண்டு வீசப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது ஆர்எஸ்எஸ் அலுவலகத்திலும் குண்டு வீசப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வீச்சால் அலுவலகத்திற்குள் சில பொருட்கள் சேதமடைந்ததாகவும், இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பில்லை எனவும் காவல் துறை தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.