பெலகாவி: மோல் கிராமத்தைச் சேர்ந்தவர் பேப்பப்பா சத்யப்பா அல்லோலி (82). கரோனா தொற்றால் பாதிப்படைந்த இவர், வீனஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மே 2ஆம் தேதி கரோனா பாதிக்கப்பட்ட இறந்துபோனவர் உடலை மருத்துவ ஊழியர்கள் தவறுதலாக சத்யப்பா வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, இறந்தவரின் முகத்தைப் பார்க்காமல் இறந்த உடல் தகனம் செய்யப்பட்டது. பின்னர் வீனஸ் மருத்துவமனை ஊழியர்கள் பேப்பப்பா உறவினர்களுக்கு அழைத்து மருத்துவமனையில் அவர் உயிருடன் இருப்பதாக கூறியுள்ளனர். இதற்கிடையில் மற்றொரு இறந்த உடலின் இறுதி சடங்கு செய்யப்பட்டுள்ளது.