மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூரில் தெருநாய்களால் துண்டாக்கப்பட்ட குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை 2 நாள்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்பகஞ்சேரி போலீசார் கூறுகையில், திரூரின் செனக்கல்லில் குழந்தையின் உடல் பாகங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்து குழந்தையின் உடல் பாகங்களை மீட்டோம்.
தெருநாய்களால் துண்டாக்கப்பட்ட குழந்தையின் உடல் - dogs bitten newborn baby
கேரளாவில் தெருநாய்களால் குழந்தையின் உடல் துண்டாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்பின் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்த பாகங்கள் தெருநாய்களால் துண்டாக்கப்பட்டுள்ளன. ஆனால், குழந்தை அப்போது உயிரோடு இருந்ததா அல்லது இறந்தபின் கடிக்கப்பட்டதா என்பது குறித்து உடற்கூராய்வுக்குப் பின்பே தெரியவரும். இருப்பினும், இந்த பகுதியில் அண்மையில் குழந்தை பெற்ற தாய்மார்களின் பட்டியலை சேகரிக்க தொடங்கிவிட்டோம். அதேபோல, குழந்தையை காணவில்லை என்று யாரோனும் புகார் அளித்துள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:டெல்லி கொலை வழக்கு.. பட்டாக்கத்திகளுடன் போலீஸ் வாகனம் வழிமறிப்பு.. 2 பேருக்கு நீதிமன்ற காவல்..